Wednesday, February 12, 2014
சவூத் குடும்பம் ஏன் ஈரானைப் பயப்படுகின்றது-வெறுக்கின்றது?
முதலாவது காரணம் மார்க்க ரீதியிலானது. சவூதி அரேபியாவின் உத்தியோகப்பூர்வ (முறைமைப்பட்ட) மதம் வஹ்ஹாபிஸமாகும். இந்த கடுமுனைப்பான உச்சநிலை திரிபுக் கொள்கையின்படி, ஷீஆ இஸ்லாம் என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒரு மத மாற்றமாகக் காணப்படுகிறது. இஸலாமிய 'மத நம்பிக்;கை அற்றவர்களாக'க் கணிக்கப்படுபவர்கள் ஷீஆக்கள் மாத்திரமல்லர். சுன்னிகள் உட்பட, வஹ்ஹாபி அடிப்படை வாதக் கோட்பாட்டிற்கு ஒத்திருக்காதவர்களெனக் கருதப்படும், எல்லா வடிவங்களைக் கொண்ட முஸ்லிம்களும், அத்தோடு கிறிஸ்தவர்களும், ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும்- அனைவரும், அவ்வாறே 'மத நம்பிக்;கை அற்றவர்களாக'வே கணிக்கப்படுகிறார்கள்ளூ மேலும் அவர்கள், ஈவிரக்கமில்லாமல் தாக்கப்படுகின்றார்கள்- மரணத் தறுவாய் அளவுக்குக் கூட.
உருக் குலைந்த வஹ்ஹாபி நம்பிக்கையின்படி, ஷீஆ முஸ்லிம்கள் 'மத நம்பிக்;கை அற்றவர்களுள்' மிகவும் மோசமானவர்கள். இதனாற்றான், முக்கியமாக வஹ்ஹாபி கொள்கைவாதத்தினால் உந்தப்பட்ட, சிரிய அரசுக்கு எதிரான ஆயுதக் கோஷ்டிகள் (இவர்கள் தக்ஃபீரிகள் என்ற பெயரைக் கொண்டும் அழைக்கப்படுகின்றார்கள்), சிரியா சண்டையில், ஷீஆக்களையும் நெருங்கிய உறவுள்ள அலவிகளையும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளுக்குள் ஆட்படுத்துகின்றனர்.
வரலாற்றுக் காரணங்களினால் இன்று இந்த பிரதேசத்திலும் உலகிலும், ஈரான்தான் ஷீஆ இஸ்லாத்தின் மத்தியத் தலமாக விளங்குகிறது. இதனால், சவூதிகளின் பகைமைக்கு மத்தியத் தலமாக விளங்கும் தகுதியையும் ஈரான்தான் பெற்றுக் கொள்கிறது.
இரண்டாவது காரணம், ஈரானின் இஸலாமியப் புரட்சியைப் பின்னோக்கிச் செல்கின்றது. 1979ல் ஈரானியப் புரட்சி வெற்றி கண்டு, அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருந்த சர்வாதிகாரி முஹம்மத் றிஸா ஷா பஹ்லவி தூக்கி எறியப்பட்ட போது, அந்தக் குழப்பம் பிரதேசத்திலிருந்த எல்லா எதேச்சதிகார ஆட்சியாளர்களையும் பீதி கொள்ளச் செய்தது. ஏனெனில், அடக்குமுறை ஆட்சிகளுக்கெதிராக மற்ற மக்களும் கிளர்ந்தெழுவதற்கான உணாவுரீதியான தாக்கத்தை அந்தப் புரடசி வழங்கியது. இதனாற்றான், சவூதி ஆட்சியாளர்கள் உடனடி பதில் நடவடிக்கையாக 1980 ஆரம்பத்தில் பாரசீக வளைகுடா பாதுகாப்பு உடன்படிக்கையை உருவாக்கினார்கள், இதில் மற்ற முடியாட்சிகளான குவைத், கதர், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பனவும் இடம் பெற்றன.
உண்மையில், ஈரானுடனான சவூதி ஆட்சியாளர்களின் விரோதப் போக்கு, ஈரானியப் புரட்சியின் பின்னர் இன்னும் தீவிரமாகியே காணப்படுகிறது. செயல் மூலம் அதிகளவுக்கு நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கும் ஈரானின் ஜனநாயக தகுதிச் சான்றுகள், தனது எதேச்சதிகாரத்திற்கு உலை வைக்கும் ஓர் அச்சுறுத்தல் என சவூத் குடும்பம் காண்கிறது. பிரதேசத்தில் ஈரானின் அரசியல் செல்வாக்கு வளர்கின்ற அளவுக்கு தங்கள் இருப்பிற்கான ஓர் அச்சுறுத்தல் இருப்பதாக சவூதி ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். மேற் குறிப்பிட்டவாறு, பிரதேசம் எங்குமே ஈரானின் கரம் காணப்படுகிறது எனச் சந்தேகப்படும் பிரிட்டனுக்கான சவூதித் தூதுவரின் கூற்று, (அதே நேரம் அவ்வாறில்லை யென்ற போதிலும்), ஈரான் பற்றி சவூத் குடும்பத்திற்கு இருக்கும் சித்தப் பிரமை கொண்ட மனோ பாவத்தை விளங்க வைக்கிறது.
மூன்றாவது காரணம், பெருமளவுக்கு லௌகீகம் சம்பந்தப்பட்டதாகும். ஆயினும், ஒரு வேளை அதுதான் சவூத் குடும்பத்தின் இறுதியான அக்கறை யாயிருக்கலாம்: அஃது, எண்ணெய் மற்றும் வாயு பொருளாதாரம் பற்றிய அதிமுக்கிய பிரச்சினை.
ஓபெக்கின் 12 உறுப்பினர் நாடுகளுள் முன்னணியில் இருக்கும் மூன்று உற்பத்தியாளர்கள் சவூதி அரேபியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளாகும். அதிக முக்கியத்துவம் வாய்;ந்தது, ஈரானின் பிரம்மாண்டமான வாயு வளம். இது இன்னும் ஒரு பொருளாதார வளமாகப் பயன்படுத்தப்படவில்லை. இயற்கை வாயு என்பது அடுத்த நூற்றாண்டில் எதிர்காலத்தைய எரிபொருளாக விளங்கப் போகிறது. குழாய்களின் மூலம் எடுத்துச் செல்வதற்கும், கிடைக்கும் சக்தி அளவைப் பொறுத்தவரையிலும், இது அதிக பயன்பாட்டுத் திறன் வாய்ந்த ஓர் ஆற்றல் வளமாகத் திகழ்கிறது. சுற்றுச் சூழலைப் பொறுத்தவரையிலும், இயற்கை வாயு எண்ணெய்யை விட மிகச் சுத்தமான எரிபொருள். இது எரிவதனால் மிக குறைந்த தீங்குகளைக் கொண்ட உபபொருட்களையே தருகிறது.
பூமியின் மீது அறியப்பட்ட மிகப் பெரிய அளவிலான இயற்கை வாயு சேமிப்புத் தளம் பார்ஸ் படிநிலம்தான்ளூ இதனை ஈரான்தான் கைவசம் வைத்திருப்பதாகக் கணிக்கப்படுகிறது. வர்த்தகத் தடைகள் அகற்றப்படுவதன் வாயிலாக ஈரானின் சர்வதேச உறவுகள் இயல்புநிலையை அடையுமானால், அந்நாடு இப்போதை விடவும் வல்லமை மிக்க உலகளாவிய ஆற்றல் வள நாடாக மாறும் சாத்தியம் உண்டு. குறிப்பிடத்தக்க விதத்தில் வணிகத் திறனுடனான முக்கியத்துவம் என்னவென்றால், (ஓபெக் உறுப்பினர் அல்லாத) ரஷ்யாவுடன் ஈரானும் ஐரோப்பியச் சந்தைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முதன்மை நிலையைப் பெற்றுக் கொள்ளும்.
அடக்கி வைக்கப்பட முடியாத மனிதத் தேவைகள் காரணமாக மாறாமல் எகிறும் இந்த முன்னேற்றத்தை, தனக்கான ஓர் அவசரமான அச்சுறுத்தலாக சவூத் குடும்பம் காண்கிறது. சவூதி அரேபியாவில் எண்ணெய் நிறையவே கிடைக்கின்றதுளூ இயற்கை வாயு மிகக் குறைவாகவே கிட்டுகின்றது. எனவே, ஆற்றல் உற்பத்தி நாடு என்ற வகையில், சவூதியின் வணிகத் துறை முக்கியத் தகைமை தேய்வுறுகின்ற அதே வேளை, ஈரான் அதன் விசாலமான இயற்கை வாயுப் படிவங்களின் காரணமாக மேலும் வளர்ச்சியடையும்.
.சவூதிக் கண்ணேட்டத்தின் பிரகாரம், எப்படியாவது ஈரான் தனது சாத்தியக் கூறான ஆற்றல் செல்வத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியாமல், எல்லா வழிகளிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சவூதி அரேபியா கடன் வாங்கிய கால எல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் எண்ணெய் சேமிப்பை முடிவில் ஈரானின் வாயுச் செல்வம் விஞ்சி விடும். ஏற்கனவே, சவூதி ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அவர்கள் வேலை வாய்ப்பு அற்று இருப்பதாலும், எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாத ஜனத் தொகை 'டைம் பொம்'மின் மீது உட்கார்ந்து இருக்கிறார்கள். இது வரைக்கும், எண்ணெய் ஏற்றுமதியால் கிடைக்கும் நாட்டின் பொதுநிதிக் கொடுப்பனவுகளைக் கொண்டு அதனை ஈடு கட்டி வருகின்றார்கள். அதுவும் சொற்ப காலத்திற்குள் முற்றுப் பெற்று விடும்.
சவூதியின் எண்ணெய்ப் பொருளாதாரம் முற்றுப் பெற்று, ஈரான் ஒரு முன்னணி நாடாகத் திகழும் வகையில் இயற்கை வாயுக்களின் புதிய உலகளாவிய ஆற்றல் பொருளாதாரம் காரணமாக அது பின் தள்ளப்பட்டால், என்ன நடக்கும்;? பிரதேசத்தில் ஈரானின் அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்ளூ இறுகிய நிலையடைந்த சவூதி எதேச்சதிகாரிகளின் அதிகாரத்தின் மீதான பிடி தளர்வடைந்து விடும்.
அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார தலைவிதி, சவூதியினதும் ஏனைய பாரசீக வளைகுடா அரசாட்சிகளினதும் பெட்ரோ டொலர் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. வங்குரோத்து (திவால்) ஆகி;ப் போன அமெரிக்க டொலர், ஏற்கனவே பெரும்பாலும் சவூதிகளும் அவர்களுடன் தொடர்புடைய ஷெய்க்களும் தங்கள் சரக்குகளை அமெரிக்க நாணயத்தில் விற்று, இலாபத்தை அமெரிக்க நிதிக் கருவூதிலத்திற்கு சேர்ப்பித்து டொலருக்கு முட்டுக் கொடுப்பதால், இதுவரை உயிராதரவு பெற்றிருக்கிறது.
ஈரான் அதன் முழுமையான வாய்ப்பு நிலைக்கு முன்னேறி, எண்ணெய்யிலும் மிக முக்கியமாக இயற்கை வாயுவிலும் வர்த்தகம் மேற் கொண்டால், அது பெரும்பாலும் ஐரோப்பிய யூரோ, ரஷ்ய ரூபிள், ஜப்பானிய யென் அல்லது சீன யுஆன் நாணயங்களிற்றான் இருக்கும். அப்படியானால், அது அமெரிக்க டொலருக்கு பேரழிவு நாளாக அமையும்ளூ நீண்ட நாட்களாக அது வீழ்ந்து விடும் என எதிர்பார்த்தபடி நிச்சயமாக வீழ்ந்தே போகும்.
முடிவில், ஈரானின் தளைகள் அகற்றப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்திற்கான சவூத் குடும்பத்தின் ஆழமான கடும் எதிர்ப்பில் வொஷிங்டனும் பங்கு கொள்கிறது. அது மறைபொருளான வஹ்ஹாபி காரணங்களுக்கல்லாமல், அதிமுக்கிய பொருளாதார சுய பாதுகாப்பிற்காகத் தான். எனவேதான், இந்த வாரம் ஃபிரெஞ்ச் வியாபார தூதுகுழு வொன்று கூட்டு வாணிபத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஈரானுக்கு விஜயம் செய்த போது, வொஷிங்டனிடமிருந்து பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கலவரப்பட்டு போன அமெரி;க்காவின் உள்துறை செயலாளர் ஜோன் கெர்ரி, ஃபிரான்ஸின் உள்நாட்டமைச்சர் லோரன்ட் ஃபெபியஸைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தூதுகுழுவிற்கான தனது எதிர்ப்பைத் தெரிவித்ததாக அறிவிக்கப்படுகிறது. டொலரை வீசியெறிந்து விட்டு, ஈரான் ஐரோப்பியாவுடன் சுயாதீனமான வர்த்தகம் மேற் கொள்வதைக் காண அமெரிக்கா கண்டிப்பாக விரும்பவில்லை.
சவூதிச் சர்வாதிகாரிகளுக்கும் அவர்களின் அமெரிக்கப் போஷகர்களுக்கும், ஈரான் ஒரு பொருளாதாரச் சக்தியாகப் பரிணமிப்பதை அனுமதிக்க இயலாது. அது நேரடியாக சவூத் குடும்பத்தை அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அச்சுறுத்துவதாக அமைந்துவிடும்ளூ அது மறுபுறத்தில் வொஷிங்டனை அதன் அடித்தளத்திலேயே ஆட்டங் காண வைத்து விடும்.
மேற் சொன்ன எல்லா காரணங்களுக்காகவும், சவூதி ஆட்சியாளர்கள் அனைத்திற்கும் மேலாக ஈரானை அஞ்சுகிறார்கள். ஸியனிஸ இஸ்ரவேல் அரசையும், கிழக்கு அல் குத்ஸில் (ஜெருசலத்தில்) அது இஸ்லாமிய புனித ஸ்தலங்களைப் பாழ்படுத்தி நாசம் விளைவிப்பதையும் எதிர்த்து, தங்களை இஸ்லாத்தின் பாதுகாவலர்களென சுயமே பிரகடனப்படுத்திக் கொள்ளும் அல் சவூத் குடும்பத்தினர் ஒரு வார்த்தைதானும் பேசியது கிடையாது. அவர்களுக்கிருக்கும் பயமும் விரோதமும், ஈரானுக்கும், அதன் நேச நாடுகளான சிரியா, பஹ்ரைன் மக்கள், ஈராக், எமன், வேறு பலவற்றுக்கும் எதிராக மறைமுகமான யுத்தமொன்றைத் தொடுப்பதற்குத் தான் முனைப்பு கொள்ள வைத்திருக்கிறது. ஈரானை எந்த விதத்திலாவது அடக்கி வைக்க வேண்டும், தடுத்து நிறுத்த வேண்டும், தடைகளை ஏற்படுத்தி முன்னேறாமற் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்ளூ வொஷிங்டனும் புவியியல் அரசியல் தேவைகளுக்காக சவூதியின் பக்கம் சாய்ந்துள்ளது.
ஆயினும், எதிர்வரும் தசாப்தங்களில், உலகளாவிய ஆற்றல் பொருட்களின் தேவைக்கான கட்டமைப்புத் தகடுகள் கடுமையாக நகர்கின்ற போது, சவூதி ஆட்சியாளர்களும் அவர்களின் அமெரிக்கப் போஷகர்களும், தோல்வியை அரவணைக்கும் பக்கத்திற்றான் தாங்கள் இருப்பதைக் காண்பார்கள். சொல்லப் போனால், மிகச் சரியான வழியில் இது அல் சவூதினதும் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் இறுதி முடிவுக்கு வழி கோலும். அதன் காரணமாக, விரோதமும் தீர்ந்து போகும்.
பி;ன்குறிப்பு:
திரு.கே எனது கட்டுரை பற்;றி ஒரு விமர்சனம் தந்துள்ளார். அதில் அவர், நான் உருவரை செய்துள்ள மூன்று காரணங்களுக்கு மேலதிகமாக நான்காவது அம்சமொன்றை (அதாவது, சட்டப்படியான நிலை குறித்து) கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகிறார்: 'ஈரானிய அரசு சட்டப்படியானதாகும்ளூ அதேநேரம், அல் சவூத் சட்டப்படியானதல்ல. இஸலாமியக் குடியரசு ஒரு மக்கள் புரட்சியின் மூலம் அமைந்ததுளூ அங்கு உண்மையான தேர்தல்;கள் நடத்தப்படுகின்றனளூ அது மனிதாபிமான நிலைப்பாடொன்றைக் கொண்டிருக்கிறதுளூ அங்கு உண்மைபூர்வமான இஸ்லாமிய அறிவுப் புலமை காண்ப்படுகிறது. மறுபக்கத்தில், அல் சவூத், பிரிட்டிஷாரின் துணையுடன் பலாத்காரமாக தாம் ஆளும் பகுதியைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுளூ அது முற்றிலும் எதேச்சதிகாரமானதுளூ மனித சமுதாயத்தின் தீது வெறுப்பை உமிழ்கிறதுளூ மனிதர்களுக்கு தீங்கு இழைக்கின்றதுளூ அது போலி வஹ்ஹாபி 'அறிஞர்களை' தன் வசம் வைத்திருக்கிறது - இவர்கள் ஒரு விஷக் கிருமியை விட முஸ்லி;ம் உம்மத்திற்கு ஆபத்தானவர்கள். ஈரானின் வெற்றியை காண்பதற்கும், எல்லா விதத்திலுமான ஸியனனிஸப் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் ஈரான் பெற்று வரும் மதிப்பு மரியாதையை உணர்ந்து கொள்வதற்கும், சட்ட விரோத அல் சவூத் அரசு தயாராயில்லை.'
மேலதிகக் கருத்திற்காக நான் அவருக்கு நன்றி மொழிகிறேன். அல் சவூத் ஏன் ஈரானை இத்துணை ஆழமாக மறுதலிக்கிறது, சகித்துக் கொள்ள முடியாமலிருக்கிறது என்பதற்கு தகுந்த வாதங்களை முன் வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார். அவர் கூறிய மாதிரி, சவூதி ஆட்சியின் குறைகளையும், தலை கீழான தனமையையும், அசிங்கத்தையும் காட்டும் கண்ணாடியாக ஈரான் அதன் முன்னால் நின்று கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர் ஃபினியன் குன்னிங்காம் (1963ல் பிறந்தவர்) சர்வதேச விவகாரங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இவர் விவசாய ரசாயனத் துறையில் முதுமானி பட்டதாரி. இவர் பத்திரிகைத் துறையில் பிரவேசிக்கும் முன்னர், இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் ரசாயனத்திற்கான அரச சங்கத்தின் விஞ்ஞான இதழ் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். மேலும், சுமார் 20 ஆண்டுகள் பெரும் செய்தி ஊடக நிறுவனங்களில் ஓர் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கடமை யாற்றியுள்ளார். அயர்லாந்து பெல்ஃபாஸ்டைச் சேர்ந்த இவர், தற்போது கிழக்கு ஆஃபிரிக்காவில் ஸ்தாபனம் சாராத ஒரு பத்திரிகை யளராக நிலைபெற்றுள்ளார். அங்கிருந்து கொண்டு, இவர் பஹ்ரைனையும் அரபு வசந்தத்தையும் பற்றி, தான் பாரசீக வளைகுடாவில் ஒரு செய்தி நிருபராக இருக்கும் போது கண்ணால் கண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூலை எழுதி வருகிறார். பஹ்ரைன் முடியாட்சியின் ராணுவம் இழைத்த மனித உரிமை மீறல்களை விமர்சித்து எழுதியதால், இவர் 2011 ஜுpனில் பஹ்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் பிரஸ் டீவீயில் சர்வதேச அரசியல் பற்றி இப்போது பத்தி எழுதுகிறார்.
(தமிழில்: இப்னு புகாரி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment