முஸ்லிம்கள் பிரச்சினை தெளிவாக புறிய நாங்கள் சில காலம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.
உதுமானிய கிலாபத்தின் வீழ்ச்சியுடன், முஸ்லிம்கள் ஒரு இஸ்லாமிய சூழலிருந்து மாறி ஒரு சடவாத இறை நம்பிக்கையற்ற உலக சூழலில் வாழ ஆரம்பித்தனர். கோத்திர ஜாஹிலி நவகாலனித்துவம் இஸ்லாமிய புனித பூமியில், பனீ ஸஊதிகள் மூலம் கோலோச்ச
ஆரம்பித்து இரண்டாவது மகாயுத்தத்துடன் முஸ்லிம்கள் மார்க்க விழுமியங்கள் இன்னும் திரிவுபடுத்தப்பட்டு மோசமாக மாறி யஹூதி நஸாராக்களின் வல்லாதிக்கய சக்திகளின் சமய, கலாச்சார, பொருளாதார சூழலில் மூழ்கியது. நாசகார உலக சக்திகள் உலகமெங்கும் வியாபித்து தனது கோரப்பிடியை உறுதியாக்கிய காலமது. எப்படி இன்று டெல் அவீவிலிருந்தும், வத்திக்கானிலிருந்தும் இயங்கும் முறையே: யூத; கிறிஸ்தவ மதம் திரிவுபடுத்தப்பட்டுள்ளதோ, அதே போல்த்தான் ரியாத்திலிருந்து இயங்கும் இஸ்லாமும் திரிவு படுத்தப் பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் - இலங்கை முஸ்லிம்கள் உட்பட-இன்று உலக அலவில் வியாபித்திருக்கும் போலியான, இந்த இஸ்லாமிய விழுமியங்களிலிருந்து விடுபடாதவரை முஸ்லிம்கள் நிலையிலும், முஸ்லிம்களை மற்றவர்கள் பார்க்கும்; அனுகும் முறையிலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதுமில்லை; அப்படி எதிர்பார்த்திருப்பதனால் எங்களுக்குள் ஒன்றும் ஆகப் பாவதுமில்லை. ஒரு யதார்த்தத்தை முஸ்லிம்கள் மறந்துவிடலாகாது. அதாவது: ஆசியாவிலுள்ள அனைத்து பௌத்த நாடுகளும்: வியட்நாம்; கமபூச்சியா; லாவோஸ்; சீனா; மியன்மார்; இலங்கை போன்ற அத்தனை நாடுகளும் இரண்டாம் மகா யுத்தத்தின் பின் உலகில் தோன்றிய சடவாத வல்லாதிக்க சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து பல யுத்த தினிப்புகளை எதிர்கொண்டது அண்மைய சரித்திர உண்மைகள் -(வியட்நாம் யுத்தம் முதல் புலிகள் யுத்தம் வரை)- ஆனால் இதே கால கட்டத்தில் உலக வல்லாதிக்க; சடவாத சக்திகளின்-(எமது மத்திய கிழக்கு குபேர இஸ்லாம் விரோத மன்னர்களின் வழிகாட்டளில்) -உலக வல்லூருகளின் எடுபிடிகளாக நாங்கள் காரியமாற்றினோம்; காரியமாற்றிவருகிறோம் என்பதுவும் ஒரு கசப்பானதும்; ஆபத்தானதுமான உண்மையே.
தென் ஆசியாவில் பெரும்பான்மையாக வாழும் நாமிருவரும்-(பௌத்தர்களும்; இஸ்லாமியர்களும்)- எங்கள் உலக வல்லாதிக்க சக்திகளுக்
கெதிரான போராட்டத்தை ஒருமுகப்படுத்தி ஒற்றுமையாக எங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலமிது. அப்படியல்லாமல் மேற்கத்தியவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பௌத்தர்களுடன் எதிர்வாதம் புரியம் காலமன்று.
இன்று தென் ஆசியாவில் நடந்தேரும் பௌத்த இஸ்லாமிய முறுகள் நிலையை ஸாமுவேல் ஹன்டிங்டனி்ன் 'க்லேஷ் ஒஃப் த ஸிவிலைஸேஷனின்', அமுல்படுத்தலின் ஒரு அங்கமாகவே நாங்கள் பார்க்க வேண்டும்.
முஸ்லிம்கள் தங்கள் தனித்துவத்தை உலக வல்லாதிக்க சக்திகளிடமிறுந்தும், அவர்கள் நீண்ட கைகளாக; தரகர்களாக இயங்கும் எம் குபேர மன்னர்களிடமிருந்தும்; எங்களைப் பிரித்துக் காட்டாத வரை; முஸ்லிம்கள்: டெல் அவீவிலிருந்து இயக்கப்படும் தௌறாத்தைப் போல் (யூத மதம்); வத்திக்கானிலிருந்து இயங்கும் இன்ஜீலைப் போல் (கிறிஸ்தவம்); ரியாத்திலிருந்து இயங்கும் ஃபுர்க்கானும் (இஸ்லாமும்) முற்றிலும் திரிபு படுத்தப்பட்டுள்ளது என்ற கசப்பான மற்றும் அபாயகரமான உண்மையை முஸ்லிம் சமூகம் உணராதவரை; மாற்எறீடுகள்ங்கசெய்ள்யாதரை; எங்கள் நிலை அபாயகரணமாதே.
ஸியாத் முஹம்மத்
No comments:
Post a Comment